search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் மழை"

    சென்னையில் கடந்த 2 நாட்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டியது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக புழலில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. #TNRain
    சென்னை:

    சென்னையில் கடந்த 2 நாட்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டியது.

    இதைப்போல் சென்னை புறநகர் பகுதிகளிலும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலையும் சென்னையில் மிதமான மழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    திருவள்ளூரில் இன்று காலை சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பொன்னேரி, பழவேற்காடு, அண்ணூர் பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக புழலில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீ) விவரம் வருமாறு:-

    பொன்னேரி - 20, ஊத்துக்கோட்டை-1, கும்மிடிப்பூண்டி-22, திருவள்ளூர்-2, பூந்தமல்லி-20, செம்பரம்பாக்கம்-35, சோழவரம்-40, தாமரைப்பாக்கம்-14, திருவாலங்காடு-18, புழல்-61, கொரட்டூர்-19.

    தொடர்ந்து மழை பெய்தாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லை.

    இதற்கிடையே வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனவே வரும் நாட்களில் மழை தீவிரம் அடையும் போதும் ஏரிகளுக்கு அதிக அளவு தண்ணீர் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #TNRain
    ×